ஆன்மீகம்




பணம் பண்ணும் பராக்கிரமமிருந்தால் பகல்வேஷமும் புண்ணிய வேஷமாகும், பரலோகத்திலோர் இடம் புக் பண்ணுவான் பகவான்






ஆன்மீகம் அறிந்தோரெல்லாம் ஆன்மீகவாதியன்று, ஆன்மீகத்தில் அமிழ்ந்தோரே ஆன்மீகவாதி.  அறிந்தோருக்கு செல்வம் சுகமாகும், அமிழ்ந்தோருக்கோ செல்வம் சுமையாகும். அறிந்தோருக்கு சொத்தும் சொந்தமும் இரு கண்கள், அமிழ்ந்தோருக்கோ இறைவன் ஒருவனே சொத்தும் சொந்தமும்.


மதத்தைப் பரப்புவதினும் மனிதத்தைத்ப் பரப்பு,  சமயத்தைப் போதிப்பதினும் சமத்துவத்தைப் போதி,  இறைவனிடம்  ஏற்றம் பெறுவாய்,  சாமி உனக்கு சாகா வரம் தருவார்.


மதமேறும் மனிதனை மானிடன் எனும் இனத்திலிருந்து தள்ளி வைத்தால் தீவிரவாதமேது,  திகிலேது,  திகைப்பேது,  அகால மரணமேது..  சொந்தங்கள் உனைச் சொந்தம் கொண்டாடப் பணம் தேடும் மதமேறிப் பிண்டமே,  பிணமாகி நீ தேடும் மதமேது.





எல்லோரையும் ஏற்பவன் இறைவன், இருப்போரை மட்டும் ஏற்பவன் மனிதன், இகழ்ந்தோரை இகழ்பவன் மனிதன், இகழ்ந்தோருக்கும் இருகரம் நீட்டுபவன் இறைவன், உறவிற்கு ஊறு விளைவிப்பவன் மனிதன், உறவை மனதில் விளைவிப்பவன் இறைவன், வாழ்வில் மயங்குபவன் மனிதன், நல்மனதில் மயங்குபவன் இறைவன்







No comments:

Post a Comment